சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர்களுடன் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், பொதுச் செயலாளர் பி.முரளிதரராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக மாநில உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்தொடர்பாக கடந்த 15ம் தேதி டெல்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

கடந்த 19-ம்தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்டது.

வரும்தேர்தலில் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்துவது ஆகியவை குறித்தும் இதில் ஆலோசிக்கபட்டதாக தெரிகிறது. முன்னதாக நேற்றுகாலை தாம்பரம் வள்ளுவர் குருகுலத்தில் பாஜக முழுநேர ஊழியர்களுக்கான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.

Leave a Reply