இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ் தானுக்கான தனது முதலாவதுபயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.
முன்னறிவிப்பில்லாத திடீர் பயணமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார்.

லாகூர் விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப், மோடியின் கரங்களை பிடித்து புன்னகையுடன் வரவேற்றார். அதன் பின்னர், நவாஸ் இல்லத்தில் இருதலைவர்களும் சந்தித்துப்பேசினர்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடியின் திடீர் வருகையையொட்டி, பாகிஸ்தான் தரப்பு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தது.

இந்த திடீர் பயணம் குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ்ஷரிப்பை  லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.அத்துடன் பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்த தாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply