தமிழகத்தை பேரிடர்மாநிலமாக அறிவிக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருக்கும் போராட்டம் நியாயமற்றது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ரெட்டேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தமிழக மழை வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவிகள்செய்ததாக கூறினார்.

மழைவெள்ள நேரத்தில் செயல்பட்டது போதும் என்று இருக்காமல் நிவாரணபொருட்கள் உரியவர்களுக்கு முறையாக சென்றுசேர தமிழக அரசு நடவடிக்கை எடுக்ககோரியுள்ளார்.

நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தாலும், அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:

Leave a Reply