இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இணைந்த அகண்டபாரதம் ஒரு நாள் உதயமாகும் என்று பாஜக. தேசிய பொதுச் செயலர் ராம்மாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச செய்திநிறுவனமான அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் ராம் மாதவ் கூறியுள்ளதாவது: வரலாற்று ரீதியாக ஒரேபகுதியாக இருந்தவை இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான். 60 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிக்கப்பட்டவை . இவை இணைந்திருப்பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கவேசெய்கின்றன. எந்த ஒருநாட்டுடன் யுத்தம்செய்து அதை இணைக்க மாட்டோம். மக்களின் ஒருமித்த கருத்துடனேயே இந்த பகுதிகள் ஒருங்கிணையும். இந்தியாவை பொறுத்த வரை ஒரே கலாச்சாரம், ஒரேமக்கள், ஒரேதேசம் என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

Leave a Reply