பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டதற்கு பாகிஸ்தான் பயணத்திற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவாக கருத்து   தெரிவித்துள்ளனர்.

* சுஷ்மா சுவராஜ் (மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்): பிரதமர் மோடி ஒரு ராஜதந்திரி போல செயல்பட்டுள்ளார். அண்டை நாடுகளுடன் எப்படி இருக்கவேண்டும்  என்பதை இது காட்டுகிறது.

* ராம் மாதவ் (பாஜ பொதுச் செயலாளர்): இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நெறிமுறை சார்ந்த அரசியலின் பாதையை தகர்தெறியும் பயணம் இது. இந்த பயணம்  இரு நாடுகளுக்கும் மிகத்தேவையானது. வாஜ்பாயின் பிறந்தநாளான இன்றைய தினத்தை விட இந்த பயணத்துக்கு சிறந்த நாள் வேறு இல்லை.

* டி.ராஜா (இ.கம்யூ. தேசிய பொதுச்செயலாளர்): இரு நாட்டு உறவில் பல்வேறு தடைகள் உள்ளன. சமீபத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு வார்த்தை,  சுஷ்மா சுவராஜின் பாகிஸ்தான் பயணம் இவற்றின் மூலம் அந்த தடைகள் தகர்க்கப் பட்டு வருகின்றன. அதன் அடுத்த கட்டமாக பிரதமர் மோடியின் திடீர்பயணம்  அமைந்துள்ளது. பேச்சு வார்த்தையால் மட்டுமே இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்த்து, நட்புறவை பலப்படுத்த முடியும்.

* சையது கிலானி (பிரிவினைவாத தலைவர்): இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவதில் எங்களுக்கு எந்தபிரச்னையும் இல்லை. இருப்பினும், இருதலைவர்களின் பேச்சுவார்த்தை முயற்சி வெற்றிபெற்றால், காஷ்மீர் பிரச்னையை மக்களின் எதிர்பார்ப் புகளுக்கு ஏற்ப இருநாடுகளும் தீர்வு காண வேண்டும்.

* மிர்வாய்ஸ் உமர் பரூக் (நவீன ஹூரியத் அமைப்பின் தலைவர்): மோடியின்  திடீர் பாகிஸ்தான்பயணம், சாதகமான நடவடிக்கை. இந்தியா-பாக். நெருங்கிவரும்  எந்த ஒருவாய்ப்பையும் காஷ்மீர் மக்கள் வரவேற்பார்கள்.

* முப்தி முகமது சயீத் (காஷ்மீர் முதல்வர்): பிரதமரின் பயணம், அமைதி முயற்சிக்கான சரியான பாதையில் செல்வதாகும். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையே  அமைதி திரும்புவதில் முக்கியபங்கு வகிக்கும்.

* சுதீந்திரா குல்கர்னி (அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர்): பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தை மனதார வரவேற்கிறேன். இரு நாட்டு உறவில் இது  மிகப் பெரிய சம்பவம். இரு நாட்டு மக்களும் இந்த சந்திப்பை வரவேற்கின்றனர்.

* முகமது சலீம் (மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர்): பாகிஸ்தானுடன் இணைந்து அமைதிக்கான முயற்சியில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையையும்  இடது சாரிகள் வரவேற்கும். போட்டோவுக்கு போஸ் தருவது, தனிப்பட்ட நல்லியல்பு ஆகியவற்றையும் தாண்டி நாம் முன்னேறிச்செல்ல வேண்டும்.

* உமர் அப்துல்லா (காஷ்மீர் முன்னாள் முதல்வர்): மீண்டும் பாகிஸ்தானுடனான உறவை புதுப்பித்துக் கொள்வதில் இது ஒரு நல்லநடவடிக்கை, வரவேற்க கூடியது.  ஆனாலும் இந்தவிஷயத்தில் உறுதியான நிலைப்பாடு தேவை. இது இல்லாததால் இருநாடுகளுக்கு இடையேயான அமைதி முயற்சி வெற்றிபெறாமலே போகிறது.  இதை இரு பிரதமர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

* பிரவீன் தொகாடியா (விஎச்பி தலைவர்): பிரதமரின் திடீர் பாகிஸ்தான் பயணம், இந்தியாவில் தீவிரவாத செயல்கள் புரிந்த தாவூத், ஹபீஸ் சயீத், லக்வி  ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.