பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தான் சென்று நவாஸ்ஷெரீப்பை சந்தித்து பேசியதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன

அமெரிக்கா வரவேற்பு

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், மோடி பாகிஸ்தான் சென்று நவாஸ்ஷெரீப்பை சந்தித்து பேசியதை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளுக்கும்  இடையே நல்லுறவு நிலவுவது அந்த பிராந்தியத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயன் தருவதாக இருக்கும் என்றார்.

சீனா

மோடி–நவாஸ் சந்திப்பு பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங்கிடம் நிருபர்கள் கருத்துகேட்டனர். அதற்கு அவர், அது பற்றிய தகவலை அறிந்ததாகவும், இந்தியா–பாகிஸ்தான் உறவில் புதிதாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற் பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அண்டைநாடு என்ற முறையிலும், நட்புநாடு என்ற முறையிலும் இந்தசந்திப்பு குறித்து சீனாமகிழ்ச்சி அடைவதாகவும், முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. பொதுச் செயலாளர்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூனும் வரவேற்று உள்ளார். பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீப்பை சந்தித்துபேசியது வரவேற்கத்தக்க சரியான நடவடிக்கை என்றும், இதேபோல் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி இரு நாடுகளும் உறவை பலப்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியதாக ஐ.நா. சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள்

பாகிஸ்தானில் உள்ள கட்சிகளும் இந்தசந்திப்பை வரவேற்று உள்ளன. பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்க்கட்சி (பாகிஸ்தான் மக்கள் கட்சி) தலைவர் சையத்குர்ஷித் ஷா கூறுகையில், மோடியின் பாகிஸ்தான் வருகையை தங்கள்கட்சி ஆதரிப்பதாக கூறினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ கூறுகையில், மோடியின் பாகிஸ்தான் வருகை வரவேற்கத்தக்கது என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு இதுபோன்ற பேச்சு வார்த்தைகள் மூலம்தான் தீர்வு காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப்பை மோடி சந்தித்து பேசியதை வரவேற்றுள்ள தெரீக்–இ–இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், இந்தசந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தஉதவும் என்றார்.

மோடியின் பாகிஸ்தான் வருகை, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான உறவில் புதியதொடக்கமாக அமைந்து இருப்பதாக அவாமி தேசிய கட்சியின் தலைவர் ஜாகித் கான் கூறியுள்ளார்.

‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘வால்ஸ்டிரீட் ஜர்னல்’, ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ ஆகிய அமெரிக்க பத்திரிகைகளும் மோடி–நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசியதை வரவேற்று இருக்கின்றன.

Tags:

Leave a Reply