பார்லிமென்டிற்கு அதிக நாள் ஆப்சென்ட், அதிகவெளிநாடு பயணங்கள் என்று தொடர்சர்ச்சைகளில் சிக்கி வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், முதன் முறையாக, புத்தாண்டை கொண்டாட ஐரோப்பாவிற்கு செல்வதாக வௌிப்படையாக கூறிவிட்டு செல்லகிறார்


எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், எங்குபோகிறோம் என் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காமல், 50 நாட்களுக்கும் மேலாக வெளி நாட்டிற்கு சென்று, அதற்கான காரணத்தை, ராகுல்கடைசி வரை கூறாத சம்பவம், கடந்த பார்லிமென்ட்வரை எதிரொலித்திருந்தது.

இந்நிலையில் 2016ம் ஆண்டு புத்தாண்டை ஐரோப்பாவில் கொண்டாட இருப்பதாகவும், அதற்காக சில நாட்கள் ஐரோப்பாவிற்கு செல்ல உள்ளதாகவும்,.  ராகுல், டுவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


பா.ஜ.க கருத்து : ராகுல், விடு முறைக்கு எங்கே செல்கிறார் என்று இங்கு யாருமே கேட்க வில்லை. இந்த விஷயத்தை காங்கிரஸ் வேண்டு மென்றே பெரிதாக்குகிறது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply