ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலூன்ற முடியாது. அதற்கு தடுப்பாக இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் செயல் படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  அவர் பேசியதாவது , "இந்தியாவின் குடும்ப பாரம்பரியம்தான் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு ஒருதடுப்பாக செயல்படுகிறது".

என்னால் உறுதியாக கூற முடியும், ஐ.எஸ். தீவிரவாதத்தால் இந்தியாவில் ஒரு போது காலுன்ற முடியாது. இதற்கு நம்முடைய கலாச் சாரம் மற்றும் பாரம்பரியம்தான் காரணம். நாட்டின் உள்துறை அமைச்சராக சொல்கிறேன் இந்திய முஸ்லிம்கள் ஒரு போதும் தங்கள் குழந்தைகள் ஐ.எஸ். தீவிரவாதத்தால் பாதிக்கப் படுவதை அல்லது கவரப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply