இந்தியா – ஜப்பான் உறவை வலுப்படுத்தும் விதத்தில் 3 நாள் அரசுமுறைப் பயணமாக,  டிசம்பர் 11 அன்று ஜப்பான் பிரதமர் ஷிஜோ அபே புது டெல்லி வந்து சேர்ந்தார். டிசம்பர் 12 அன்று, இந்தியா – ஜப்பான் தொழில் வர்த்தக மாநாட்டில் பேசுகையில் மோடியின் அரசு கொள்கை முடிவெடுக்கும் வேகம் தனது நாட்டின் புல்லட் ரயிலின் வேகத்தை விட அதிகம் என்று புகழாரம் சூட்டினார்.  இம்மாநாட்டில் பேசிய மோடி, நமது நாட்டின் வளர்ச்சியின் வேகமும் ஜப்பான் நாட்டின் புல்லட் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லவேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் இயக்க ஜப்பான் நாடு உதவி செய முன்வந்துள்ளது.  இந்த ரயில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.  தற்போது அதிகபட்சமாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வேகம் 140 கி.மீ என டெல்லி ஆக்ரா இடையில் இயக்கப்படவிருக்கும் ‘கதிமான்’ எக்ஸ்பிரஸ் 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது; இந்த ரயிலே தற்போதைக்கு மிக விரைவு ரயில்.  புதிதாக செயல்படுத்தப்படவிருக்கும் புல்லட் ரயில் திட்டத்தின் திட்ட மதிப்பு 15 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 98000 கோடி ரூபா). மும்பை – ஆமதாபாத் இடையில் 505 கி.மீ. தூரத்திற்கு இதற்காக விசேஷ ரயில்பாதை அமைக்கப்படும்.  இவ்விரு நகரங்களுக்கிடையிலான இந்த தூரத்தை இந்த ரயில் இரண்டு மணி நேரத்தில் கடந்து செல்லும்.  இவ்வழிப்பாதை  மொத்தம் 11 குகைப் பாதைகளைத் (tunnel) தாண்டியும், மும்பையில் கடலுக்குக் கீழாகவும்  அமைக்கப்படவிருக்கின்றது.  இத்திட்டத்தை நிறைவேற்ற நிதியுதவி செவது மட்டுமல்லாமல், அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் ஜப்பான் வழங்கவிருக்கின்றது.  பிரத்தியேகமாக உருவாக்கப்படவிருக்கும் இந்த ரயில் பாதையில், ரயில் என்ஜின், ரயில் பெட்டிகள் அனைத்தும் ஜப்பானில் வெற்றிகரமாக இயக்கப்படும் ஷிங்கன்சென் புல்லட் ரயில் நிறுவனமே வழங்கும்.  கடந்த 1964ஆம் வருடம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புல்லட் ரயிலில் இது வரை 560 கோடி மக்கள் பயணம் செதுள்ளனர்.  ஒரு முறை கூட விபத்தை சந்திக்காத இந்த புல்லட் ரயில் ஒரு முறை கூட கால தாமதம் ஆனதாக வரலாறே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட பிரதமர் அபே, சனிக்கிழமை மாலை வாரணாசி சென்றார்.  அங்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செயப்பட்டிருந்த கங்கை ஆரத்தியிலும் கலந்து கொண்டு, கங்கை நதிக்கு தனது நமஸ்காரங்களை தெரிவித்துக்கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.