பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, உண்மையிலேயே தேவைப்படுகிற நலிவுற்ற நபர்களுக்குமட்டுமே மானியம் வழங்க முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் விதத்தில் சமையல்கியாஸ் மானியத்தை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கைவிடுவதற்கு வேண்டுகோள் விடுத்து செல்போன்களில் குறுந்தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதைக்கண்டு இந்திய எண்ணெய் கழகத்தின் இண்டேன் சமையல் கியாஸ் பயன்படுத்துகிற 1,470 வாடிக்கையாளர்கள் மானியம்வேண்டாம் என துறந்துவிட்டனர்.

இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் பெயர்களை இண்டேன் இணையதளத்தில் வெளியிட்டு கவுரவிக்கின்றனர்.

இது தொடர்பாக அதில், ”சமையல் கியாஸ் மானியத்தை துறந்த உங்கள் செயலை மனதார பாராட்டுகிறோம். நலிவுற்றோர்மீது நீங்கள் கொண்டுள்ள கவனத்தையும், அக்கறையையும் இதுகாட்டுகிறது. இது இன்னும் லட்சோப லட்சம்பேருக்கு (மானியம் துறக்க) ஊக்கமாக அமையும். இவர்கள் மூலம் (1,470 வாடிக்கையாளர்கள்) ஆண்டுக்கு ரூ.88 லட்சத்து 20 ஆயிரம் சேமிக்க முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply