இந்தியா ஈரானுடனான உறவுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்துவருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் தில்லியில் நடக்கும்  இரு தரப்பு கூட்டு ஆணைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஈரான் நாட்டின் பொருளாதார விவகார மற்றும் நிதியமைச்சர் டாக்டர் அலி டாயி பின்யா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேசினார்.

இந்த சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, இணைப்பு, துறைமுக அபிவிருத்தி உட்பட, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த தயார்நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜூலை மாதம், பிரிக்ஸ் மாநாட்டின்போது, ஈரானிய அதிபர் ருஹானியை சந்தித்து பேசியதை நினைவுகூர்ந்தார்.

Leave a Reply