கர்நாடக மாநிலம் மைசூரில் நடை பெறவுள்ள 103-வது இந்திய அறிவியல்மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

மோடி இரண்டு நாள் பயணமாக ஜனவரி 2 ,3 தேதிகளில் கர்நாடகம்  செல்கிறார். பயணத்தின் முதல்நாளில் தனியார் மருத்துவமனை ஒன்றினை திறந்துவைக்கும் அவர், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

பயணத்தின் இரண்டாம் நாளான ஜனவரி 3-ம்தேதி மைசூர் பல்கலை கழகத்தில் பிரதமர் மோடி 103-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கிவைக்கிறார். இதனைதொடர்ந்து, விமான தொழில்நுட்ப ஆலை ஒன்றின் அடிக்கல் நாட்டுவிழாவிலும் கலந்துகொள்கிறார். அதேபோல் யோகா ஆராச்சி மற்றும் பயன் பாடு குறித்த மாநாட்டிலும் மோடி கலந்துகொள்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.