அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பிரதமர் நரேந்திரமோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீஃபும் மீண்டும் சந்தித்து பேசலாம் என தெரிகிறது.

 வாஷிங்டனில் மார்ச்மாதம் 31ம் தேதியும், ஏப்ரல் மாதம் 1ம் தேதியும் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்தமாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு மோடிக்கும், நவாஸ் ஷெரீஃபுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்புவிடுத்துள்ளார்.

 அப்போது பிரதமர் மோடியும், நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துப்பேசலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இந்தியா திரும்பும் வழியில் லாகூருக்கு அண்மையில் பிரதமர் சென்றார்.

 அப்போது இருதலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப்பேசினர். இதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள், வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக அறிவித்தனர்.

Leave a Reply