ஜம்மு காஷ்மீர் முதல்மந்திரியான முப்தி முகம்மது சயீத் கடந்த 24 ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்நிலையில்,  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்தி முகம்மது சயீத்தை நேரில்சந்தித்து நலம் விசாரித்தார். உடல்நலம் குறித்து கேட்டறிந்த ராஜ்நாத் சிங் விரைவாக உடல்நலம் தேற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மருத்துவர்களிடமும் முப்தி உடல் நலம்குறித்து விசாரித்தார்.  சையது உடல் நலம் தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவ மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 ம் தேதி ஜம்முகாஷ்மீர் முதல் மந்திரியாக முப்தி முகம்மதுசயீத் பதவியேற்றார். விபி சிங் பிரதமராக பதவி வகித்தபோது அவரது அமைச்சரவையில் முப்தி முகம்மது சயீத் அங்கம் வகித்தது கவனித்தக்கது.

Leave a Reply