‘‘பின் தங்கிய வகுப்பினரும் பொருளாதாரத்தில் மேம்படவேண்டும் என்பதில் அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது. தலித் தொழில் முனைவோரின் நலனுக்காக உழைக்கும் அரசு இது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் நடந்த எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் தேசிய மாநாட்டில் பிரதமர் பங்கேற்று பேசியதாவது:

அம்பேத்கர் இந்திய அரசியல மைப்பை கட்டமைத்தவர் மட்டுமல்ல, ஒருபொருளாதார மேதையும் கூட. தொழில் மயமாக்கல் மட்டுமே நமது தலித்சகோதர, சகோதரிகளுக்கு அதிகப்படியான நலன்களை தரும் என அவர்கூறியது மிகச்சரியானது. கோடிக்கணக்கில் வரிசெலுத்துவது, பல்லாயிரம் பேருக்கு வேலைவழங்குவது என்ற வட்டத்தில் பின்தங்கிய வகுப்பினரும் பங்குபெற வேண்டும். அதற்காக பின்தங்கிய வகுப்பினரும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறவேண்டும் என்பதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது.

தலித் தொழில்முனைவோர் நலனுக்காக இந்த அரசு உழைக்கிறது. முன்பு, சிறு தொழில் முனைவோர் வங்கியில் கடன் உதவிபெறுவது மிக சிரமமான காரியமாக இருந்தது. தற்போது அது எளிமைப்படுத்தப் பட்டுள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ், எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பெண் தொழில் முனைவோரும் சுமார் 80,000 பேர், ரூ.50,000க்கும் மேல் கடன்பெற்று பயனடைந்துள்ளனர்.

இத்தகைய சிறு தொழில் முனைவோரால் 14 கோடிபேர் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர். நாங்கள் வேலை வழங்குவோரை உருவாக்க விரும்பு கிறோம். வேலைதேடுவோரை அல்ல. இன்னும் 2 ஆண்டில் தலித் தொழில்முனைவோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டில் இருந்ததைவிட இரட்டிப்பாகும் என நம்பிக்கையுடன் உள்ளேன்.

இது நிச்சயம் நடக்கும். ஏனெனில் இந்தரசு உங்கள் அரசு. உங்களுக்கு அதிகாரம் அளிக்க உழைக்கின்ற அரசு. இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply