பிரதமர் மோடியின் பாகிஸ்தான் வருகையை அந்நாட்டு  மக்கள் வரவேற்றதாக வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் தெரிவித் துள்ளார்.

பிரதமர் மோடியின் வருகைகுறித்து,  சர்தாஜ் ஆசிஷ், கொள்கை அறிக்கை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் வரும் ஜனவரி 14-15-ல் சந்திப்பர். அப்போது, அடுத்த ஆறுமாதங்களில் 10 விவகாரங்கள் குறித்து பேசுவதற்கான வரைவை தயாரிப்பர்.

கடினமான முடிவுகள், முக்கியவிவகாரங்கள் காரணமாத பேச்சுவார்த்தை சவால்மிக்கதாக இருக்கும். பேச்சுவார்த்தை தொடர்பாக நிதர்சனத்தை மீறிய எதிர்பார்ப்புகள் குறித்து எச்சரிக்கை அவசியம். சிலபிரச்சினைகள் குறித்து விரைவிலும், எஞ்சிய விவகாரங்கள் படிப்படியாகவும் பேச்சு வார்த்தையில் இடம்பெறும்.

மோடியின் பாகிஸ்தான் வருகை நல்லெண்ண வருகையாகும். இதனை பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மை மக்களும், இந்தியர்களும், சர்வதேச சமூகத்தினரும் வரவேற்றுள்ளனர்.

இரு தலைவர்களும் 5 முறை சந்தித்துள்ளனர். லாகூர் சந்திப்பால் நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. இது வரும் பேச்சு வார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு ஆசிஷ் தெரிவித்தார்.

Leave a Reply