காங்கிரஸ் கட்சி நாடாளு மன்றத்தை அழித்துவருவதாக கடுமையாக சாடியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் புத்தாண்டு தீர்மானம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

டெல்லி – மீரட் இடையே புதிதாக அமைக்கப் பட்டுள்ள  14 வழி விரைவுசாலையை தொடங்கி வைத்த பின்னர் நொய்டாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, " கடந்த 50 – 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை அனுபவி த்தவர்கள், நாடாளுமன்றத்தை அழிக்கவும்… நாடாளுமன்றம் செயல் படுவதை நிறுத்தவும் எவ்வித உரிமையும் இல்லை.

மக்களால் நிராகரிக்கபட்ட அவர்கள் பணத்திற்காக தான் நாடாளுமன்றத்திற்கு வருகிறார்கள்… நாடாளுமன்றம் செயல் படுவதை அவர்கள் விரும்பவில்லை… மக்களவையில் நாங்கள் பேச அனுமதிக்கப் படாமல் இருந்திருக்கலாம். ஆனால் விவாதிக்கவும், ஆலோசனை நடத்தவும், விவாதத்திற்கு பின்னர் முடிவெடுக்கவு ம்தான் நாங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளோம் என்பதை இந்தமக்கள் மன்றம் முன் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாளை புத்தாண்டு. அதனை நீங்கள் ( காங்கிரஸ் ) கொண்டாடும் போது நாடாளுமன்றம் செயல்படுவதை நிறுத்துவதில்லை என்ற உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

Leave a Reply