உத்தரபிரதேசம் நொய்டாவில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் பங்கேற்க மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ் மறுத்துவிட்டார். வேறுபணி இருப்பதாக வெளியில் கூறினாலும், நொய்டாவில் நடைபெறும் அரசுவிழாக்களில் பங்கேற்றால் முதல்வர் பதவி நீடிக்காது என்ற மூட நம்பிக்கை காரணமாகவே அவர் மோடியை சந்திக்க மறுத்துவிட்டார் என லக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன. 

கடந்த காலங்களில் நொய்டாவில் நடைபெற்ற  அரசுவிழாக்களில் பங்கேற்ற  முதல்வர்கள் வீர் பகதூர் சிங், என்.டி.திவாரி, கல்யாண்சிங், மாயாவதி ஆகியோர் தங்கள் பதவியை பறிகொடுத்துள்ளனர். இதனால் நொய்டா விழாவை அகிலேஷ் புறக்கணித் திருப்பதாக லக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:

Leave a Reply