காங்கிரஸ் கட்சி தான் ஜல்லிகட்டுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், பொங்கலுக்கு கண்டிப்பாக ஜல்லிக் கட்டு நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சென்னையை அடுத்த பட்டாபி ராமில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் 12 ஜோதிர் லிங்க தரிசனம் நடைபெற்றது. இதனை தமிழிசை சவுந்தர ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப் பேரவைத்தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள பாஜக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்பங்கள் விரைவில்பெறப்படும் என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் ஜல்லிக் கட்டுக்கு எதிரான நிலையில் உள்ளதாகவும் அப்போது தமிழிசை குற்றம்சாட்டினார்.

Leave a Reply