டெல்லி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் நகரத்திற்கு இடையே அமைக்கப்படவுள்ள 14 வழி விரைவுச்சாலைக்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்திற்கு தேவையான 348.6 ஹெக்டேர் நிலப் பரப்பில் ஏற்கனவே 343.36 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப் பட்டுள்ளது.

87 கிலோ மீட்டர் சாலைகொண்ட இந்த திட்டத்தில் 9 கிலோமீட்டர் இணைப்பு சாலையாகவும், 6 குறுக்கு சந்துகளும், மற்றும் 4 வழி சாலை, சர்வீஸ் ரோடு, சைக்கிள் பாதை, சிறிய மற்றும் பெரியபாலங்கள், வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் நடைபயணிகளுக்கான சுரங்க பாதைகளும் அமைக்கப்படவுள்ளது.

தற்போது உள்ள நெடுஞ்சாலையை 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் விரைவு வழிச் சாலையாக மாற்றும் இத்திட்டத்தை அடிக்கால் நாட்டி பேசிய மோடி கிராம மக்கள் கூட தற்போது இரு வழிச்சாலையில் திருப்தி கொள்வதில்லை. அவர்கள் இரண்டு மற்றும் 4 வழிச்சாலைகளே தங்கள் தேவையென கருதுகின்றனர். ஒவ்வொரு கிராம வாசியும் தங்கள்கிராமம் வளர்ச்சியின் பாதையோடு நிச்சயம் இணைக்கபட வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.


சிக்னல்களே இல்லாத இந்த விரைவுவழிச்சாலை மூலம் இனி டெல்லியிலிருந்து மீரட்டிற்கு வெறும் இரண்டரை மணி நேரத்திலேயே செல்ல முடியும்.

Tags:

Leave a Reply