சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாஜக., பிரமுகர் கல்யாணராமனை, கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்தனர்.'பேஸ்புக்' சமூக வலை தளத்தில் குறிப்பிட்ட மதத்தவருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டார் எனக்கூறி, கல்யாணராமனை, தமிழக போலீசார் கைதுசெய்து, சென்னை புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர். கட்சி சார்பில் அவரை சந்திப்பதற்காக நேற்று, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், புழல்சிறைக்கு சென்றார்.

கல்யாணராமனை சந்தித்து பேசியபின், அவர் அளித்த பேட்டி: பேஸ்புக்கில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை, விமர் சனங்களை சுதந்திரமாக பதிவுசெய்து வருகின்றனர். அந்த அடிப்படையில்தான் கல்யாண ராமனும், சிலகருத்துகளை பதிவிட்டிருக்கிறார். அதை குற்றமாக கருதி, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது தவறு.

'பேஸ்புக்பதிவை, குற்றமாக கருதக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. ஹிந்துகடவுளை, யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; எந்த நடவடிக்கையும் கிடையாது.

கேட்டால், கருத்துசுதந்திரம் என சொல்வர். ஆனால், கல்யாண ராமன் விமர்சனம் மட்டும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாக கருதப் படுகிறது. கருத்து சுதந்திரத்திற்குகூட மதச்சாயம் பூசப்படுகிறது.
அதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீசார், கல்யாண ராமனை மட்டும் உடனே கைதுசெய்துள்ளனர். பாரபட்சமாக போலீசார் நடந்து கொள்வது

எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.எந்த அறிவிப்பும் இல்லாமல், விருகம் பாக்கத்தைச் சேர்ந்த, 24 பேரை, கைது செய்து புழல்சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மனைவிமார்கள், பரிதாபமாக ஜெயில்முன் கூடியிருக்கின்றனர். தமிழக போலீசின் செயல்பாடு இப்படிதான் உள்ளது.

மதுரையில், அமைச்சர் அலுவலகத்திலேயே வெடிகுண்டு வீசப்படுகிறது; தமிழக சட்டம் – ஒழுங்கு இப்படிதான் உள்ளது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.