தொடங்கிடு இந்தியா… எழுந்திடு இந்தியா" அதாவது "ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்து அது குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

மாநாட்டில் பேசிய மோடி, இந்தியாவின் எண்ண ஓட்டத்தை மாற்றுவோம். இங்குள்ள சிவப்பு நாடா முறையை ஓழிப்பதுதான் எனது நிர்வாக பாணி. வரிசீரமைப்பில் வெளிப்படை தன்மை இருக்கும். புகழ் பெறுவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்ததிட்டம் துவங்கப் படவில்லை.

இந்த திட்டத்தின் நோக்கம் அதற்கு அப்பாற்பட்டது. மாற்றமே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியகாரணியாக உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஒருஆப்ஸ்களில் கிடைக்கிறது. இதனை நான் உணர்ந்துள்ளேன். நானும் நரேந்திரமோடி ஆப் என ஒன்றை வைத்துள்ளேன்.இதில் முக்கியதகவல்கள் மக்களுக்கு பகிரப்பட்டுள்ளது.உங்களின் அனுபவங்களை இதில் பகிர்ந்துகொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் வகையிலான ஆப்களை கண்டுபிடிக்க வேண்டும்.


எழுச்சி இந்தியா' திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்  இந்தத் திட்டத்துக்கான முதல்கட்ட தொகுப்புநிதியாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

"எழுச்சி இந்தியா' திட்டம் குறித்து தில்லி செங்கோட்டையில் நான்பேசினேன். அப்போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவது சற்றுகடினம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

எனினும், மனச்சோர்வு அடையாமல் நாம் முயன்றோம். அதன்பலன் இன்று கையில் கிடைத்துள்ளது. "எழுச்சி இந்தியா' திட்டம் செயல்வடிவம் பெற்ற இந்த நாளினை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகவே நான் கருதுகிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை படித்தால் நமக்கு ஒருவிஷயம் கண்கூடாக புலப்படும். அது, அவர்களின் ஆபத்தை எதிர் கொள்ளும் துணிச்சலான மனநிலையே.

இப்போது நாம் தொடங்கி யிருக்கும் "எழுச்சி இந்தியா' திட்டமும் முழுக்கமுழுக்க அத்தகைய மனநிலையைக் கொண்டவர்களுக்குத்தான் சரியாக இருக்கும்.

புதிய தொழில் தொடங்கப் போவதாக நீங்கள் (தொழில்முனைவோர்) கூறியவுடன், எதிர்மறையான பேச்சுகளையே முதலில் நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

அவற்றையெல்லாம் புறந்தள்ளி, நீங்கள் தொழிலில் வளர்ச்சி யடைய வேண்டும். முதன் முதலில் கொலம்பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்கும்போது, தான் எதனைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. பிறகு நம்பிக்கையுடனும், விடா முயற்சி யுடனும் பயணித்ததன் விளைவாக அவர் கண்டறிந்தது ஒரு உலகவல்லரசை (அமெரிக்கா) அல்லவா? ஆபத்துகளை எதிர் கொள்ளும் துணிவு கொலம்பஸýக்கு இல்லாவிட்டால், இன்று அமெரிக்கா இல்லை.

அதேபோல், கடின உழைப்புடனும், துணிச்சலுடன் புதியதொழிலை தொடங்கி நீங்கள் அதில் வெற்றிபெற வேண்டும்.

 முதன்முதலில் தொழில் தொடங்க போகிறீர்கள் என்பதால் உங்களுக்கு அரசு பல சலுகைகளையும், வரி விலக்குகளையும் வழங்கி யிருக்கிறது. "எழுச்சி இந்தியா' திட்டத்தின் கீழ் தொழில்தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொழில்முனைவோர் மேற்கொள்ளும் தொழில்குறித்து அரசு சார்பில் முதல் 3 ஆண்டுகளுக்கு எந்த கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடாது. தொழில் முனைவோருக்கான காப்புரிமைக் கட்டணத்தில் 80 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

தொழில்முனைவோர்கள் தங்கள் சொந்த முதலீட்டு பங்குகளை விற்பனை செய்யும் போது, அதற்கு 20 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.

புதிய தொழில் முனைவோர்கள், சில காரணங்களுக்காக தங்கள் தொழிலை விட்டு வெளியேற நினைத்தால் அதற்கான நடைமுறைகளும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. வெறும் 90 நாள்களுக்குள் இந்த நடைமுறைகள் முடிவடையும் வகையில், திவால்சட்டத்தின் சில ஷரத்துகள் தளர்த்தப் பட்டிருக்கின்றன.

இந்த திட்டத்துக்காக நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.10,000 கோடியை தொகுப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது. அதில், ரூ.2,500 கோடியை முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், முதல்கட்டமாக 2.5 லட்சம் தொழில் முனைவோருக்கு கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தொழில் முனைவோர்களுக்காக இந்த அளவு சலுகைகளை எந்த அரசும் வழங்கியதில்லை. நம் நாட்டின் இளைஞர்கள் மீது நம்பிக்கைவைத்து இந்த முயற்சிகளை எடுத்திருக்கிறேன். நம் நாடு கோடிக் கணக்கான சவால்களை எதிர்கொண்டுள்ளன. அதேநேரத்தில், அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க நம்மிடம் கோடிக் கணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.