உத்தரகண்ட் வெள்ளத்திலிருந்து குஜராத் மாநிலத்தை சேர்ந்து 15 ஆயிரம்பேரை காப்பாற்றி அழைத்துச்சென்றதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என்று பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து லக்னோவில் செய்தியாலர்களை சந்தித்த ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

உத்தரகாண்டில் இருந்து 15 ஆயிரம்மக்களை மீட்டு அழைத்துவந்தேன் என்று நரேந்திர மோடி எப்போதும் கூறியது இல்லை.ஆனால், இதைப்போன்ற செய்திகள் எப்படி வெளியாகின்றன என்பதை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. உத்தரகாண்ட் பேரழிவை அரசியலாக்கி அறிக்கை வெளியிடவேண்டாம் என்று பாஜக.,வினரை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.மற்றக்கட்சியினர் வெளியிடும் அறிக்கைகளுக்காக ஆவேசப்படவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.

Tags:

Leave a Reply