தேர்தல் பிரச்சாரத்துக்கு  15 குழுக்களை அமைக்க முடிவு பா.ஜ.க.,வின் பாராளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், பிரசாரக் குழு தலைவர் நரேந்திரமோடி உள்ளிட்ட 12 மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்த்துக்கான குழுக்களை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர்கள், மூத்த தலைவர்களின் தலைமையில் 15 குழுக்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இந்த குழுக்களை செயல்படுத்த சுஷ்மாசுவராஜ், அருண்‌ஜெட்லி ஆகியோருக்கு முக்கியபொறுப்புகள் வழங்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு குழுவும் பிரச்சாரக்குழு தலைவர் மோடி மற்றும் கட்சியின் தேசியதலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் மேற்பார்வையில் இயங்கும்.

Leave a Reply