சொகுசுகார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜெர்மனியின் ஃபோக்ஸ் வேகன் நிறுவனம் இந்தியாவில் ரூ. 1,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

குறைந்த செலவிலான ஏற்றுமதிமையமாக இந்தியாவை மாற்ற இந்நிறுவனம் திட்டமிட்டு இத்தகைய முதலீட்டை மேற்கொள்கிறது. இதன் மூலம் வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதிசெய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தங்கள் தயாரிப்புகளுக்கான மூலப் பொருளை இந்தியாவிலேயே உருவாக்க முடியும். அதற்காக ரூ. 1,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் உத்தி சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சந்தையாக இந்தியா திகழ்கிறது. 2018-ம் ஆண்டில் நிறுவன உற்பத்தி 2 லட்சத்தை எட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் வளர்ச்சிக்கு அதிகவாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு 24 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தஆண்டு இது 25 லட்சமாக உயரும் வாய்ப்புள்ளது. 2020-ம் ஆண்டில் இது 44 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply