ஐபிஎல் இறுதிப் போட்டிக்காக ரூ.1500 கோடிவரை பந்தயம் சூதாட்ட புகார்தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் காவல்துறை விசாரணையை கண்டுகொள்ளாமல், ஐபிஎல் இறுதிப் போட்டிக்காக ரூ.1500 கோடிவரை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறுதிப் போட்டிக்கான பந்தயதொகை ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்ட தாகவும் சூதாட்டகும்பல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.1500 கோடிவரை பந்தயம் கட்டப்பட்டிருந்தாலும் அதனை காவல்துறையினர் கண்டுபிடிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . மத்திய அரசும், கிரிக்கெட் வாரியமும் உரியநடவடிக்கை எடுக்காதது சூதாட்டம் தொடர்வதற்கு முக்கிய காரணம் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply