மானியங்கள் ரத்தாகாது தேவை படுபவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும் வகையில் முறைப்படுத்தப்படும்,  

எல்லா மானியங்களும் நல்லது என்று நான் வாதிடமாட்டேன். இது போன்ற விவகாரங்களில் சித்தாந்த ரீதியிலான நிலைப் பாடுகள் இருக்க முடியாது என்பதே எனது கருத்து.

 நாம் யதார்த்த நிலையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தேவையற்ற மானியங்களை ஒழிக்க வேண்டியுள்ளது.

 ஆனால், சில மானியங்கள் ஏழைகளையும், வசதியற்ற வர்களையும் பாதுகாக்க அவசியமானவை. எனவே, மானியங்களை முற்றிலுமாக ஒழிப்பது எனது நோக்கமல்ல. மாறாக, தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்க செய்யுமாறு முறைப்படுத்த வேண்டும்.

 அதேசமயத்தில், தொழில்துறை வளர்ச்சிக்கு அரசு அளிப்பதை "சலுகை' என்று கௌரவமாக குறிப்பிடும் பொருளாதார நிபுணர்களும், பெரும் நிறுவனங்களும், விவசாயிகளுக்கு அரசு அளிப்பதை "மானியம்' என்று கௌரவ குறைவாக குறிப்பிடுகின்றனர்.

 வார்த்தைகளில் காட்டப்படும் இந்த வித்தியாசமானது நமது அணுகு முறையிலும் வித்தியாசத்தை பிரதிபலிக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

 வரி செலுத்தும் பெரு நிறுவனங்களுக்கு காட்டப்படும் சலுகைகள் காரணமாக அரசுக்கு ரூ.62,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இதைச் சுட்டிக்காட்டுவதில்லை.

 மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க வழிகோலக் கூடிய சீர்திருத்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். பொருளா தாரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையற்ற கட்டுப்பாடுகளும், விதிகளும் நீக்கப்படும். வளங்களை ஒதுக்கீடுசெய்வதில் திறன் வாய்ந்த முறை கடைப் பிடிக்கப்படும்

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக வர்த்தக உச்சிமாநாட்டில் மோடி பேசியது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.