உலக பொருளா தாரத்தில் இந்தியா புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு வளர்ச்சிபாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் திரும்பி பார்க்கின்றன. எனது தலைமையிலான பாஜ அரசு பதவியேற்று 18 மாதங்களில் ஊழல்கள் குறைந்துள்ளன. எதிர்க் கட்சிகள் இதுவரை எந்தவொரு ஊழல் குற்றச் சாட்டையும் முன்வைக்க வில்லை. எனது அரசு விவசாயத் துறை மீது அதிக கவனம் செலுத்திவருகிறது.

விவசாயிகளுக்கு என்று புதியதிட்டம் தொடங்கபட்டுள்ளது. நீர்மேலாண்மை அவசியத்தை கருதி ஒருதுளி நீரில் அதிக விளைச்சல் என்ற நவீன முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். உரத்திருட்டு அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.

வேம்பு கலந்த உரம் வினியோகிக்கப் படுவதால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு பயிர்காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தோம். எனவே பயிர் காப்பீட்டு திட்டத்தில் திரளான விவசாயிகள் சேரந்து பயன்பெற வேண்டும். தற்போது 100க்கு 20 பேர் மட்டுமே காப்பீடு பெறுகின்றனர். இந்நிலை மாறவேண்டும்.  ஏழைகள் மற்றும் கிராம வாழ்க்கையை மாற்ற மத்திய அரசு விரும்புகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயம், உற்பத்தி, சேவைத் துறை ஆகியன மூன்று தூண்களாக விளங்குகிறது.
நாட்டின் விவசாயம், உற்பத்தித் துறை வளர்ச்சி அடைந்தால், எந்த பிரச்னையையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமே உயர்வில் உள்ளது. தற்போது இந்தியா மட்டுமே நம்பிக்கையுள்ள நாடாக இருப்பதாக உலக நாடுகள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு நீர் மேலாண்மையே தற்போதைய தேவையாக உள்ளது நீர்வளத்தை போன்று நில வளத்தையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக மண்சுகாதார அட்டை திட்டத்தை அரசு துவக்கியுள்ளது என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.