டெல்லியில் விவசாயிகள் முன்னேற்ற மாநாடு நேற்றுதொடங்கியது. கடந்த நிதியாண்டில் விவசாயத்தில் சாதனைகளை புரிந்த விவசாயிகளுக்கு பிரமதர் கிருஷி கர்மண் விருதுகளைவழங்கி கவுரவித்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண்விவசாயி பூங்கோதையை குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசிபெற்றார்.

இதுகுறித்து டெல்லியில் இருக்கும் விவசாயி பூங்கோதையிடம் பேசியபோது, "கீழே உக்காந்திட்டு இருந்தேன். மேடைக்கு வரச்சொன்னாங்க. மேலே போனதும், ஐயாவை(பிரதமர்) பாத்து குனிஞ்சு கும்பிட்டேன். அவரும் குனிஞ்சு காலைபாத்து கும்பிட்டாரு. பிறகு விருதும் கொடுத்தாங்க. இந்தவிருது வாங்கினது பெரிய சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு. நான் பெரிசா படிப்பெல்லாம் படிக்கல. எனக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். நெல், பருத்தி, சோளம்னு பயிர் செய்வேன். இதோட மக்காச்சோளமும் பயிர் செஞ்சேன். அதுக்கு இந்த விருது கொடுத்து கௌரபடுத்தியிருக்காங்க" என்றார்.

இந்த பெண் விவசாயியோடு தேனிமாவட்டத்தைச் சேர்ந்த பெத்தண்ணன் என்ற விவசாயிக்கும் கிருஷி கர்மண் விருது வழங்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply