பெட்ரோலின்  விலை லிட்டருக்கு மீண்டும் ரூ. 1.55 காசுகள் உயர்வு பெட்ரோலின் விலை லிட்டருக்கு மீண்டும் ரூ. 1.55 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பொது மக்களும், வாகன ஓட்டுனர்களும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசலின் விலைகளை மத்திய அரசு நினைத்தபோதெல்லாம் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் அரசு பதவியேற்றதில் இருந்து இதுவரை 30 முறைக்கும்மேலாக பெட்ரோல், டீசல்விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டிமத்திய அரசு இவ்வாறுசெய்கிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கே மன்மோகன் சிங் அரசு வ்க்காலத்து வாங்குகிறது. ஏழை மக்களை குறித்து கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. கடந்த ஒருமாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை 3 முறை உயர்த்தப்பட்டது. அதேபோல் டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வின்தாக்கம் மறைவதற்குள் நேற்று பெட்ரோல்விலை லிட்டருக்கு மீண்டும் ரூ. 1.55 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வு நேற்று நள்ளிரவே அமலுக்குவந்தது.

இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply