என்ன மனிதரய்யா எல் ஜி ? நாம்  அவரிடம் பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். சிக்கலான கேள்விகளுக்கு விணாடிக்கும் குறைவான நேரத்தில் அவர் பதில் அளிக்கும் விதம் அற்புதமோ அற்புதம்.

உதாரணத்திற்கு ஈவேரா பெரியாரின் பங்களிப்பு இல்லை என்கிறீர்களா ? என்கிற கேள்விக்கு….. "அவர் பங்களிப்பு இல்லை என்று கூற மாட்டேன். ஆனால் இவர்கள் இன்று தூக்கி நிறுத்தும் அளவிற்கு இல்லை. பாரதியை விடவா சாதிகளை இவர் எதிர்த்திருப்பார் ? பாரதி வாழ்ந்தே காட்டியவராயிற்றே ? ஏன் ஆயிரம் வருடங்கள் முன்பே ராமானுஜர் சொல்லாததையா இவர் சொல்லி விட்டார் ? இந்துக்களின் தர்ம நூல்களில் இல்லாத சமத்துவதை எங்கும் பார்க்க இயலாது. ராமாயனத்தை எழுதிய வால்மிகி ஒரு வேடுவர். வேத வியாசர் மீனவ பெண்ணின் மகன், ராமன் சத்திரியர், அவர் ஒரு வேடுவனான குகனை சகோதரனாக ஏற்று ஆரத்தழுவிக் கொள்கிறார். இதைவிட சமத்துவத்தை யார் வாழ்ந்து காட்டிவிட‌ முடியும் ?"

திராவிட கட்சிகள் என்று கூறினால் உடனடியாக உங்களுக்கு ஞாபகத்திற்கு வருபவர் யார் ?

"திராவிட கட்சிகளின் வேர் "ஜஸ்டிஸ் பார்ட்டியில்" உள்ளது. ஜஸ்டிஸ் பார்ட்டிதான் தேச விரோத பிரிவினைவாத கருத்துக்களுக்கு அடிப்படையாக இருந்தது. அந்த ஜஸ்டிஸ் கட்சியின் சித்தாந்தத்திற்கு ஆணி வேராக இருந்தவர்கள் மூன்று பேர். ஒன்று "மேக்ஸ் முல்லர்", இரண்டு "மெக்கலன்", மூன்று "காட்வில்". இந்த மூவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் தேச விரொத திராவிட கட்சிகளுக்கு ஆணி வேர். கூடிய விரைவில் தமிழகத்தில் பிரிவினைவாத திராவிடம் அழியும். தேசியவாத பாஜக தலை நிமிரும்"

மொத்தத்தில் எல்ஜி அவர்களின் ஒவ்வொரு கருத்தும் அருமை அருமை அருமை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.