இந்தியாவை சுரண்டலற்ற, சுயமரியாதை கொண்ட, உலகமே தலைவணங்கக் கூடிய நாடாக உருவாக்குவதற்கு ஆர்எஸ்எஸ் விரும்புகிறது

ஒட்டுமொத்த உலகமும்,"பாரத் மாதா கீ ஜே' என முழங்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவை வளம்பொருந்திய நாடாக, சுரண்டலற்ற, சுய மரியாதை கொண்ட நாடாக உருவாக்க விரும்புகிறோம். அந்த நோக்கத்தைச் செயல்படுத்து வதற்காக, நாம் நாட்டுக்காக வாழவேண்டும்.

நமது நாடு பிளவுபட்டு பாகிஸ்தான் உருவாகியபிறகு, "பாரதம்' என்ற பெயருக்கு அவர்கள் உரிமை கோரவில்லை. அவர்கள் ஏற்கமுடியாத பண்புகள் பாரதத்தில் இருந்ததே அதற்கு காரணமாகும்.

வேதங்கள் தோன்றிய இடங்களும், சம்ஸ்கிருத மொழியும் அதன் இலக் கணங்களும் தோன்றிய இடங்களும் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளன. ராமாயணத்தின் உண்மைத் தன்மை குறித்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அது நம்நாட்டின் பழங்கால வரலாறாகும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவர் பதவிக்கு தேர்தல்நடந்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியாது. ஆனால், இங்கு தலைவரை நியமிக்கமட்டுமே முடியும். அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்றார் மோகன் பாகவத்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.