1. பிரதமர் மோடியை விசிட்டிங் பிரதமர் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர் என்கிறீரே…! எங்களால் பிரதமரைப் பார்க்க இயலவில்லை எனக் குறைபட்டுக் கொண்ட (உங்களைத் தவிர வேறு) எவரையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

 

2. “விசிட்டிங் பிரதமர்” கோவை வந்த போது 48  மணி நேரத்தில் சந்தித்தோம். ஆனால் தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு நாலரை ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம் என  திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறினார்களே, இது தான் "Reachable" முதல்வரின் லட்சணமா? உங்கள் பதில் என்ன?

 

3. பாராளுமன்றத்தில் அதிமுக ‘எம்.பி’க்கள் பார்த்துப் பார்த்துப் படிப்பதை பியூஷ் கோயல் குறை சொல்லவில்லை. வார்த்தைக்கு வார்த்தை அம்மா புராணம் பாடுவதாகச் சொன்னார் என்பதை உங்களால் ஏன் திருப்பிச் சொல்ல முடியவில்லை?

 

4. மெத்தப்படித்தப் பலர் அதிமுகவில் இருக்க ஊடக விவாதத்திற்கு சொந்தக் கட்சிக்குப் பதிலாக அதிமுக சார்பாக உங்களைப் போன்ற உதிரிக் கட்சிகளை மட்டுமே அனுப்பும் மர்மமென்ன?

 

5. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கட்சியைத் துவக்கிவிட்டுத் தனக்கு ஒரு எம்.எல்.ஏ பதவிக்காக அதிமுகவின் ஊதுகுழலாக மாறியது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?

 

6. சாதாரணத் தொண்டன் நினைத்தாலும் ஜெ’வைச் சந்திக்க முடியுமென நீங்கள் சொல்வது உண்மையானால், கடந்த ஆண்டுகளில் அப்படிச் சந்தித்த அமைச்சர்கள் / சட்ட மன்ற உறுப்பினர்கள் / தொண்டர்களில் ஒரு சிலரையாவது குறிப்பிட முடியுமா?

 

7. “ஜெ” ஆயிரக் கணக்கானவர்களைச் சந்திக்கிறார் என நீங்கள் கூறுவது, அவர் காரில் பயணிக்கும் போது உங்களால் அழைத்து வரப்பட்டவர்கள் சாலை ஓரம் அணிவகுத்து நிற்பார்களே… அவர்களைத் தானே சொல்கிறீர்கள்?

 

8. தொண்டர் குறைகளை உடனேக் கேட்டுக் களைவதாக நீங்கள் சொல்லும் “ஜெ” வீட்டு முன், “குறைகளைக் கேட்கவில்லை” எனத் தொண்டர்கள்  தீக்குளிக்க முயற்சித்தச் சம்பவங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

 

9. காரில் செல்லும் போது கூடச் சாதாரணத் தொண்டர்களைச் சந்திக்கும் “ஜெ”, விருப்ப மனு கொடுத்த அனைவரையும் சந்திக்காதது ஏன்?

 

10. விருப்ப மனு நேர்காணலை மற்றக் கட்சிகள் நேரலையாக ஒளிபரப்பும் போது, நீங்கள் விருப்பப் பட்ட சிலருக்கு மட்டும் நேர் காணல் நடத்தி அந்தப் புகைப்படத்தைக் கூட (நமது எம்.ஜி.ஆர் உட்பட) எந்தப் பத்திரிகையிலும் வெளியிடவில்லையே, ஏன்? அம்மா அதில் இல்லாததாலா?

 

என்றும் தாயகப் பணியில்

எஸ்.ஆர்.சேகர்

மாநிலப் பொருளாளர்
செய்தித் தொடர்பாளர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.