பா.ஜனதா வெளியிடபோகும் தேர்தல் அறிக்கை ஒரு தொலைநோக்கு திட்டம் , தி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்கை

தமிழகத்தை ஆண்ட திமுக., சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டு அல்ல என்று எத்தனை முறை சொன்னாலும் தமிழகமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் வீடுகளில் கோலமிட்டு புத்தாண்டு கொண்டாடு கின்றனர். இன்று (நேற்று) தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி, அம்பேத்காரின் 125-வது பிறந்தநாள் விழாவாகும்.

அம்பேத்கரின் பிறந்தநாளை நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாட பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது. ஐ.நா. சபையில் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல் லண்டனில் அம்பேத்கர் தங்கி இருந்த இல்லத்தை, பலகோடி கொடுத்து வாங்கிய மராட்டிய பா.ஜனதா அரசு, அங்கு தற்போது தாழ்த்தப்பட்ட இந்தியமாணவர்கள் தங்கிப்படிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இங்குள்ள சிலகட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ‘‘அடங்க மறு, திருப்பி அடி’’. என்கிறார்கள். ஆனால் பா.ஜனதாவை பொறுத்தவரை ‘‘அடங்க மறு, ஆனால் நன்றாக படி’’ என்கிறோம். ஆதிதிரா விட வகுப்பை சேர்ந்த எம்.பி.க்கள் அதிகம் இருப்பது பா.ஜனதாவில்தான்.

தமிழக முதல்-அமைச்சர் கெயில்திட்டத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்று பிரசாரகூட்டத்தில் பேசுகிறார். இதற்கு உயர்நீதிமன்றமே, ஆரம்பத்தில் அனுமதித்துவிட்டு, இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்? என்று தமிழக அரசிடம் கேள்விகேட்டது.

இந்த ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்யக்கூடிய இடங்களில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உயிர்பலிகள் ஏற்படுகிறது. எனவே அதில் தேர்தல் ஆணையம் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

ஆளுங்கட்சி பிரசார கூட்டத்தில் உயிர் பலிகள் ஏற்படுவதை பார்த்துகொண்டு சும்மா இருக்கமுடியாது. அதேபோல் பிறக் கட்சிகளின் விளம்பர பலகைகள் என்றால் உடனே அகற்றப் படுகிறது. ஆனால் ஜெயலலிதா குறித்த விளம்பர பலகைகளை அகற்றுவது கிடையாது. தேர்தல் ஆணையம் சமதளத்தில் இருந்துகொண்டு பணியாற்ற வேண்டும்.

திமுக. தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற ரூ.70 ஆயிரம்கோடி தேவை என்று ஒருபொருளாதார நிபுணர் கூறியிருக்கிறார். வருமானம் குறித்து எதுவும் தேர்தல் அறிக்கையில் சொல்ல வில்லை. எனவே தி.மு.க.வுடையது வெறும் மாயாஜாலா தேர்தல் அறிக்கை.

ஜெயலலிதா படிப்படியாக மது விலக்கு என்கிறார். அதாவது முதல் ஆண்டு அறிவித்துவிட்டு, ஐந்தாவது ஆண்டு ஒருகடையை மட்டும் மூடுவது கூட படிப்படியான மதுவிலக்குதான். ஆனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.

சென்னையில் கான்கிரீட் சாலைகள், போடமுடியாது என்று சென்னை மாநகராட்சி சொல்வதன் பின்னணியில் மிகப் பெரிய ஊழல் இருக்கிறது. ஏனென்றால் கான்கிரீட் சாலைபோட்டால், அடுத்தாண்டு மீண்டும் சாலைபோட வேண்டி இருக்காது. கமிஷன்தொகை கிடைக்காது என்பதால்தான்.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஒரு தொலை நோக்கு திட்ட அறிக்கையாகும். இயற்கைவளங்களின் வருமானங்கள் கொள்ளை போகாமல் தடுப்பது, வேலைவாய்ப்பை பெருக்குவது போன்றவை குறித்த திட்டங்கள் அதில் இருக்கும். இன்றும் சிலதினங்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

தமிழிசை சவுந்தரராஜன் .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.