மத்திய அரசின் ‘உதய்’ மின் திட் டத்தில் தமிழகஅரசு இணையவில்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று கோவை வந்தார்.

முன்னதாக, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சிசெய்த திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் ஊழல் கட்சிகளாகவே உள்ளன. இவ்விரு கட்சிகளும் தமிழகத்துக்கு நல்லாட்சியை தரத் தவறி விட்டன.

அதேசமயம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழலற்ற நல்லாட்சியை வழங்கிவருவதால், பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. தேர்தல்பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு சிறப்பாக செயல் படுகிறது. மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, சிறைபிடித்தல் சம்பவங்கள் குறைந்துள்ளன.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க, மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் ‘உதய்’ மின்திட்டத்தில் 20 மாநிலங்கள் தங்களை இணைத்துக் கொண்டு பலனடைந்துள்ளன. ஆனால், தமிழக அரசு இணையாததால், தமிழகமக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.