அரசு ஊழியர்கள் ஓர் அணியாகத் திரண்டு மாற்றத்தின் காரணிகளாக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி யுள்ளார்.

சிவில் சர்விசஸ் தினமான இன்று அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சிலர் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றனர். நாம் அணியாக ஒன்றுதிரண்டு பணியாற்றினால் தான் முடிவுகள் நமக்குசாதகமாக அமையும். தேச கட்டுமானத்திற்காக தனித்தனியாக பணியாற்றுவதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும்.

முதலில் அரசு ஊழியம் அல்லது சேவைகள் என்பது ஒரு ஒழுங்கு முறைப் படுத்தும் செயல்பாடாக மட்டுமே இருந்தது, பிறகு சிலகாலம் கழித்து நிர்வாகம் என்றவாறு அதன்பணி மாறியது பிறகு கட்டுப்பாட்டாளர் என்பதாக மாறியது.

மேலும் காலம் மாறும் போது நீங்கள் நிர்வ்வாக திறன்களை வளர்த்துக்கொள்வது பற்றி சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். காலம் மாறிவருகிறது.

நிர்வாகியாகவும், கட்டுப்பாட்டாளராகவும் மட்டுமே இருப்பதுபோதாது. இன்றைய தினத்தின் முக்கியத்தேவை என்னவெனில் அனைவரும் அனைத்து மட்டத்திலும் மாற்றத்திற்கான காரணிகளாகச் செயல்படுவது அவசியம்.

நாம் மாற்றங்களை கொண்டு வரவேண்டிய தேவை உள்ளது. நாம் ஒரேஇடத்தில் அமர்ந்திருந்தால் பரிசோதனைகள் மேற்கொள்வதை மறந்துவிடுகிறோம். பரிசோதனைகள் செய்யாவிடில் நாம் எவ்வாறு மாற்றங்களைக் கொண்டுவர முடியும்? அதேபோல் இடர்பாடு இல்லாத பரிசோதனை முயற்சிகளும் இல்லை. எனவே பரிசோதனைகளின் இடர்பாடுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

எனவே நாம் பரிசோதனைகளில் ஈடுபட வில்லை எனில் நாம் செய்வது வெறும்வேலை என்பதாகவே முடிந்து போகும். நான் எப்பவுமே பரிசோதனைகளுக்கு வெகுமதி அளிப்பவன். வித்தியாசமாக பணியாற்றி பரிசோதனை செய்பவர்களுக்கு வித்தியாசமான திருப்திகிடைக்கும்.

மூத்த அதிகாரிகள் இளம் அதிகாரிகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இளம் பணியாளர்கள் வேறொரு தலைமுறையை சேர்ந்தவர்கள், அதனால் ஒருபணியை நிறைவேற்றுவதற்கான பல சிறந்த வழிகள் இவர்களிடத்தில் இருக்கும்.

மாற்றத்திற்கான சீர்த்திருத்தம் என்ற மந்திரம் அரசு அதிகாரிகளால் செயல் திறத்துடன் கூடிய மாற்றத்துக்கான சீர்திருத்தம் என்று புதியவிளக்கம் அளித்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது மூத்த அதிகாரிகள் தங்கள் அனுபவத்தையும் இளையோரின் திறமையையும் கலந்து நம்மால் செய்யமுடியாதது எதுவும் இல்லை என்ற நிலையை உறுதிசெய்ய வேண்டும்.

ஒரு செயலை நிறைவேற்றும்போது தடைகள் பிரச்சினைகளை தோற்றுவிக்காது, மாறாக களைப்பே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். எனவே களைப்படையும் அணுகு முறைகளை கைவிட வேண்டும்.

பொதுமக்களுடன் கலந்து செயல்படுவது, உரையாடுவது என்று செயல் பட்டால் அரசு ஊழியர்களுக்கு களைப்பும் சோர்வும் ஏற்படாது. குடிமைச் சமூகத்துடன் தொடர்பிலிருப்பது முக்கியம்.

குடிமை சமூகத்துடன் தொடர்பிலிருந்தால் அரசுத்திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலர்கள் கமிட்டி, தனிமைப்படுதலை வெற்றிகரமாக உடைத்துள்ளது. அவர்கள் மக்களுடன் நேரடியாகக் கலந்துசெயல்பட 10,000 மனித மணி நேரத்தை அர்ப்பணித்துள்ளனர்.

ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்யமுடியும் சூழலை உருவாக்க வேண்டும். 125 கோடி மக்களின் ஆற்றலும் தேசத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லும்.” இவ்வாறு கூறினார் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.