தமிழகத்தில் நடைபெற்றுவரும் குடும்ப-கம்பெனி அரசியலுக்கு வாக்காளர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.


 பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை அம்பத்தூரில் வியாழக் கிழமை நடைபெற்றது.


 இதில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் தலைமை வகித்து பேசினார். இதைத் தொடர்ந்து 24 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசியாதவது:


 தமிழகத்தில் தற்போது இரண்டுவகையான அரசியல் நடைபெற்று வருகிறது. ஒன்று குடும்ப அரசியல்; மற்றொன்று கம்பெனி அரசியல். இதுபோன்ற அரசியல் நாட்டுக்கு நல்ல தல்ல. ஜனநாயக வழியில், ஊழலற்ற ஆட்சி வேண்டுமென்றால் பாஜக அரசு தான் ஆட்சியமைக்க வேண்டும்.


 கூடுதல் நீர்வழிச் சாலைகள் அவசியம்: தமிழக ஆறுகளில் நீர்வழிச் சாலைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. ஏற்கெனவே இங்கு தேசிய நீர்வழிச் சாலைகள் இருந்தாலும் கூடுதலாக அமைப்பதன் மூலம் நீர் வளமும், வணிகமும் மேம்படும்.

 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான சரக்கு கட்டணம் சீனாவில் 8 சதவீதமாகவம், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 10 முதல் 12 சதவீதம் வரையும் உள்ளது. ஆனால், இந்தியாவில் 18 சதவீதமாக உள்ளது.

எனவே, சரக்குகட்டணத்தை குறைக்க சாலை வசதி, மற்றும் நீர்வழி போக்குவரத்துக்களை அதிக அளவில் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை சீரமைத்து நீர் வழி போக்குவரத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு ஒத்துழைத்த போதிலும். தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு அமையஉள்ள அரசு இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்புவழங்கும் என நம்புகிறோம்.

கப்பல் துறையின் மூலம் மட்டும் தமிழகத்தில் சுமார் ரூ. 83 ஆயிரம்கோடி முதலீடு செய்ய திட்ட மிட்டுள்ளோம். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அமைய உள்ள புதிய துறைமுக பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். இதுதவிர தமிழகத்தில் மேலும் 2 துறைமுகங்கள் அமைக்கப்படும். சென்னை துறைமுகத்தையும், பெங்களூரையும் இணைக்கும் விரைவுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

தமிழகத்துக்கான நலத் திட்டங்களையும், தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைப்பதில்லை. தலைமை செயலாளரை தொடர்பு கொண்டால் முதல்வர் அனுமதி இன்றி எதுவும் சொல்ல முடியாது என்கிறார். தமிழகத்துக்கான திட் டங்கள் குறித்து விவாதிக்க பலமுறை முயன்றும் முதல்வர் ஜெய லலிதாவை சந்திக்க முடியவில்லை.

 மத்திய அரசு செயல் படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்குவதற்காக தமிழகத்தின் தற்போதைய முதல்வரை எத்தனையோ முறை தொலை பேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் முடியவில்லை. எனவே மக்கள் அத்தியாவசிய பிரச்னைகளுக்காக எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் பாஜக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.


விருகம் பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜனை ஆதரித்து நெசப்பாக்கம் பஜார் தெருவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது:-


 நடைபெற விருக்கும் பேரவைத்தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடியதாக இருக்கும். மோடி ஆட்சியில் பொருளாதாரம் மேம்பட்டு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது.


 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் திருப்திகரமாக இல்லை. முத்ராவங்கி திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடியாக உள்ளது. பலமாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தப் படுவதில்லை. அவ்வாறு, செயல்படுத்தினால் அந்தபெருமை மோடிக்கு சென்றுவிடும் என மத்திய அரசின் திட்டங்களை தமிழகஅரசு செயல்படுத்த மறுத்துவருகிறது என்றார். மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளிலும் பாஜக தேசியச் செயலர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.