சாலை விபத்துகளை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய தரைவழி போக்கு வரத்து மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நடக்கும் 5 லட்சம் விபத்துகளில், சுமார் 1½ லட்சம்பேர் உயிரிழக்கின்றனர். இது மிகவும் துரதிருஷ்ட வசமானது. இந்த எண்ணிக்கையை பாதியாக, அதாவது 50 சதவீதமாக குறைக்க மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

சாலை விபத்துகளில் பலத்தகாயம் அடைந்து மரணத்தை தழுவி, தங்களது குடும்பத்தினரை பல்வேறு இன்னல்களிலும், இடையூறுகளிலும் விட்டுசெல்வதை நினைக்கும் போது எனக்கு மனவலி ஏற்படுகிறது.

அதிகப்படியான விபத்துகளை கொண்டுள்ள நாடாக இந்தியாவிளங்குகிறது. இதனை எதிர்கொள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் 2 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட விபத்துபகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

விபத்தே இல்லா இந்தியாவை உருவாக்கவேண்டும். இதுதான் எங்களுடைய கனவு. போக்கு வரத்து நெருக்கடியும் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாகிறது இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply