பணத்தை பார்க்காமல் வேட்பாளரின் குணத்துக்கு வாக்களி யுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக. வேட்பாளர்களை ஆதரித்து இல.கணேசன் பிரசாரம் செய்த போது, ''வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை திரு மங்கலம் ஃபார்முலா என்பார்கள். இப்போது அது, தமிழக ஃபார்முலாவாகி விட்டது. தோல்வி ஏற்படும் என்று தெரிந்தபிறகுதான், தேர்தலில் போட்டியில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். இது, அவர் ஏற்கெனவே திட்டமிட்டு எடுத்தமுடிவு.

தமிழகம் முழுவதும் தற்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுவரும் பண மூட்டைகள் எந்தக் கட்சியினுடையது, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன, தொடுத்தவழக்கு என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும்.

ராமர் பாலத்தை இடிக்காமல் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என முதலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக. அரசுதான் கூறியது. இத்திட்டத்தை நிறைவேற்ற 4-வது வழித் தடம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் மத்திய அமைச்சராக இருந்த திமுக.வின் டி.ஆர்.பாலு, ராமர்பாலம் என்ற ஒன்றில்லை எனக் கூறி, இத்திட்டத்தை 6-வது வழித்தடத்தில் நிறைவேற்றுவோம் என்றார். மேலும், கருத்துக்கேட்புக் கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்தினார். அப்போது, அதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக. தனது தேர்தல் அறிக்கையில், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறியிருப்பது, அத்திட்டத்தின் மூலம் லாபம் சம்பாதிப் பதற்காகவே. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ராமர்பாலத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்படும் எனத்தெரிவித்துள்ளது. அதனால், பணத்தை பார்க்காமல் வேட்பாளரின் குணத்தை பார்த்தும், தேசப்பற்று மிக்கவர்களுக்கும் வாக்களியுங்கள்" என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.