அதிமுக, திமுக இரண்டுமே ஊழல்கட்சிகள் , 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் முன்னேற வில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
.

பால்கொள்ளை, மணல் கொள்ளை என பல்வேறு கொள்ளைகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? வளர்ச்சி வேண்டுமா? என்பதை தீர்மா னிக்கும் தேர்தலே இது. ஊழலா? வளர்ச்சியா? என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கவேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு நீங்கள் மாறி மாறி வாக்களித்து இருக்கிறீர்கள். இந்த இருகட்சிகளுமே ஊழலில் திளைத்த கட்சிகள். திமுக மீது 2ஜி ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல்கள் உள்ளன.

அதிமுக தலைமை சொத்துகுவிப்பு வழக்கில் சிறைசென்று விட்டு வந்துள்ளது. பால்கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது. மணல் கொள்ளையில் ரூ.20 ஆயிரம்கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.ஊழலில் ஊற்றுக் கண்களாக விளங்கும் இந்த இருகட்சிகளையும் புறக்கணியுங்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் ஒரேகுடும்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

2014 மக்களவை தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி நரேந்திரமோடிக்கு வாக்களித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசு மீது எந்தபுகாரும் இல்லை. ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. அதே மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வேண்டுமானால் நீங்கள் பிஜேபிக்கு தாமரைசின்னத்திலும், கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டும்.கடந்த டிசம்பரில் மழைவெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஓடோடி வந்தார். ஆனால் மாநில அரசோ உறங்கிக் கொண்டிருந்தது.

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடியை வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்காமல் அம்மா பெயரில் நிவாரணம் வழங்கப் பட்டது.ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டத்துக்கு கிலோ ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.3 கொடுக்கிறது. ஆனால் இதைமறைத்து விட்டு அம்மா அரிசி என்று இலவசமாக கொடுக்கிறார்கள். மின் துறையை சீரமைத்து பயனளிக்கும் வகையில் உதய்திட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால் தங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதால் மாநில அரசு இதை புறக்கணித்து விட்டது.

இதே போல் மத்திய அரசின் ரூ.12 பிரிமிய தொகையுடன் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத் திட் டங்கள் மாநில அரசால் மக்களிடம் கொண்டு செல்லப்பட வில்லை.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.