தமிழகத்தில் தொழில்வளர்ச்சி பெருகி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க பாஜக.,வுக்கு ஆதரவு தாருங்கள் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட ங்களில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கன்னியா குமரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக நான் கன்னியா குமரி வந்தபோது, யாரை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் என்று சொன்னேனோ அதை நீங்கள் நிறைவேற்றினீர்கள். இதனால் இம்மாவட்டத்தில் பாஜக புதுவரலாற்றைப் படைத்தது. இது என் மனதில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டமக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான குளச்சல் துறைமுகம் அமைக்க ரூ. 21 ஆயிரம்கோடி செலவில் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இத்திட்டம் நிறைவடையும் போது இம்மாவட்டத்தில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் இம்மாவட்டத்தில் சுற்றுலாதொடர்பான தொழில்கள் அதிகமாக உள்ளதால், குறைந்த முதலீட்டில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குமரிமாவட்ட சுற்றுலாவை மேம்படுத்த கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வரை சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மிகப் பெரிய அளவில் சாலை மேம்பாட்டை கட்டமைத்து வருகிறோம்.

நாட்டின் முன்னேற்றம் மட்டுமே பிரச்னைகளுக்கான தீர்வாக அமையும். இதற்காக மக்கள் பாஜக.,வுடன் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

சென்னையில் மழைவெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு ஓடோடி வந்து பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப் பட்டு அவர்களுக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்ட பிரச்னையில் இலங்கை அரசை அணுகி தண்டனையை ரத்துசெய்து மீனவர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டுவந்தது.

அதேபோல் கேரளத்தை சேர்ந்த ஒருசகோதரி கடத்தப்பட்ட போது அவரையும் பத்திரமாகமீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தோம். அதேபோல் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 5,000 பேர் மும்பையில் கொத்தடிமைகளாக இருந்த போது அவர்களையும் மத்திய அரசு மீட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் பிரேம், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை 9 மாதங்களுக்குப் பின்னர் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்.

தமிழகத்தில் ஏழை மக்களுக்கு அரிசியை மத்திய அரசு மலிவு விலையில் வழங்குகிறது. அதை மாநில அரசு இலவசமாக வழங்குகிறது. நாங்கள் அனுப்பும் அரிசியின் பாக்கெட்டில் எங்கள் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தவில்லை. எனினும், தமிழக மக்களின் உணவுப்பசியைப் போக்குகிறோம் என்ற எண்ணமே எங்கள் மனதில் உள்ளது.

ஏழை, எளியபெண்கள் சமைப்பதற்காக பயன்படுத்தும் விறகு அடுப்பில் இருந்து வெளியேறும்புகை 400 சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அளவுக்கு உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கிறது. இந்த நிலையைப் போக்க எண்ணிய மத்திய அரசு, நாடுமுழுவதும் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பை வழங்க தீர்மானித் துள்ளது. பாஜக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளுக்குள் இந்ததிட்டம் நிறைவேற்றப்படும்.

மேலும் வயதான, நோயுற்ற முதியோரின் ஆரோக்கிய மேம்பாட் டுக்காக 1 லட்சம் குடும்ப ங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி அளவிலான திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்தவர்கள் ஊழல் செய்தார்களே தவிர ஏழைமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் செய்தவர்கள் தமிழ்நாட்டிலும் வசித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் சிலர் ஹெலிகாப்டர் வாங்குவதிலும் ஊழல்செய்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். எந்த ஊழலும் இல்லாத சிறந்த ஆட்சியை வழங்கிவருகிறோம்.

நாட்டில் 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் இளைஞர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுகின்றனர். அப்போது அவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிட நிலத்தையும், நகைகளையும் விற்று பணம் கொடுத்து ஏமாற்ற மடையும் நிலை இருந்து வந்தது. நாங்கள் ஆட்சிக்குவந்த பின்னர் நேர்முகத் தேர்வு இல்லாமல் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வழங்குகிறோம். இதன்மூலம் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தத்தேர்தல் மூலம் நீங்கள் அதற்கோ, இதற்கோ வாய்ப்பு கொடுக்காமல் பாஜவுக்கு ஆதரவு அளித்தால், தமிழகத்தில் தொழில்வளர்ச்சி ஏற்பட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதற்கு நான் உறுதியளிக்கிறேன் என்றார் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.