மதுரையில் இந்துமுன்னணி சார்பில் 160 விநாயகர் சிலைகள்  கரைப்பு  மதுரையில் இந்துமுன்னணி சார்பில் 160 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் பூஜை, அன்னதானம் என கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இந்துமுன்னணி சார்பில் சிலைகள் கரைக்கப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 160 சிலைகள் விளக்குத் தூணில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, பழைய சொக்கநாதர் கோயில், தைக்கால்தெரு வழியாக எடுத்து வரப்பட்ட சிலைகளை அனுமான் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.

முன்னதாக ஊர்வலத்தை துவக்கிவைத்து பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், ஏற்க்கனவே இந்து கோயில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோயிலில் உள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் இருப்பு எவ்வளவு உள்ளது என ரிசர்வ்வங்கி விபரம் கோரியிருக்கிறது. இது காங்கிரசுக்கு ஆபத்தில்முடியும் என்றார்

Leave a Reply