இன்றைக்கு என்ன கிழமை என்று தலையை தடவி யோசித்து கொண்டிருந்த பொழுது மோடியின் பிரகதி
கலந்தாய்வை பார்த்தேன்…ஆஹா இன்று புதன் கிழமையல்லவா..என்று மனசுக்குள் ஓட ஆரம்பித்தது..

நேற்று ஆரம்பித்தது மாதிரி இருந்தது..அதற்குள் 12 கலந்தாய்வுகள் முடிந்து விட்டது.மன் கி பாத் மாதிரி ஒவ்வொரு மாதமும் இறுதியில் வருவது பிரகதியாகும்.
மன் கி பாத் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழ மையில் வருகிறது என்றால் பிரகதி ஒவ்வொரு மாதமும்கடைசி புதன் கிழமையில் நடக்கிறது.மன் கி பாத் மூலம்மக்களிடம் தொடர்பு கொள்ளும் மோடி பிரகதி மூலம் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்கிறார்.

PRAGATI (Pro-Active Governance And Timely Implementation)
*************************************************************************
இந்திய அரசு நிர்வாகத்தில் காணப்படும் மந்தப் போக் கை மாற்றியமைக்க திட்டமிட்ட மோடி மத்திய மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடுவதே பிரகதியின் முக்கிய நோக்கமா கும் அதாவது "துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்" இது தான் பிரகதியின் அர்த்தமாகும்.

என்னய்யா..வீடியோ கான்பரன்ஸ் எல்லாம் ஒரு சப்பை
மேட்டர்..தமிழ்நாட்டில் வளைச்சு வளைச்சு அம்மா ஆட்சி யில் இதான் ஓடிச்சு..டாஸ்மாக் கடையை தவிர மற்ற அனைத்தையும் அம்மா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தான்திறந்தாங்க..இனியும் திறக்க போகிறார்கள் எனவே இதுக் கெல்லாம் பில்டப் தேவையில்லை என்று நீங்கள் சொல்லலாம்..

ஜெயலலிதா பயன்படுத்துவது சிங்கள் பிளாட்பார்மில்
செயல்படும் வீடியோ கான்பரன்ஸ்..அதில் ஆட்களின் முகம் பார்த்து உரையாட முடியும் அவ்வளவு தான்.
ஆனால் பிரகதி கலந்தாய்வுக்கு மோடி பயன்படுத்தி கொண்டிருப்பது மல்டி பிளாட்பார்ம் ஆகும்.இங்கே மூன் றுபிளாட்பார்ம்களில் வேலை நடக்கிறது.அதாவது மூன்றுடிவிக்களின் வழியே இந்த தகவல் பறிமாற்றத் தை மோடிநடத்துகிறார்.

முதலில் டிஜிட்டல் டேட்டா மேனேஜ்மென்ட், அடுத்து வீடியோகான்பரன்ஸ்மூன்றாவது ஜியோ ஸ்பேஷியல் தொழில்நுட்பம்.இந்த மூன்றையும் இணைத்ததுதான்
பிரகதியின் சிறப்பாகும்.

அதாவது கொச்சியில் நடந்து வரும் மெட்ரோரயில் வேலையின் தற்போதைய நிலையை பற்றி அதை செய ல் படுத்தி கொண்டிருக்கும்இலியாஸ் ஜார்ஜ் என்ற ஐஏ எஸ் ஆபிசரை மோடி கூப்பிட்டு வேலை முடிய எவ்வள வு நாட் கள் ஆகும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேள்வி கேட்பார்.அதற்கு அந்த ஐஏஎஸ் ஆபிசர் இன்னமும் ஒரு வருடத்தில் முடிந்து விடும் என்பார்.

உடனே அந்த அதிகாரி நிதி பிரச்சனை இடம் கையகபடு த் துவதற்க்கு இழப்பீடு தரவேண்டும் என்று சொல்கிறார்.
உடனே இது சம்பந்தபட்ட அனைத்து கோப்புகளும் ஸ் கேன் செய்யபட்டு மோடி மற்றும் ரயில்வே உயர் அதிகா ரியின்முன் இன்னொரு டிவியில் ஓடிகொண்டிருக்கும். இதை பார்த்த மோடி அந்த இடத்திலேயே அதற்கு உண்டான நிதியை வழங்குவதற்கு உத்தரவிடுகிறார்.

இந்த இடத்தில் தான் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச் சி யான டிஜிட்டல் சிக்னேச்சர் முறையில் ரயில்வே உய ர் அதிகாரியின் அப்ரூவல் அவரின் கைஎழுத்து டிஜிட்ட ல் சிக்னேச்சர் மூலம் கொச்சிக்கு டெல்லியில் இருந்து கொச்சிக்கு டிஜிட்டல் டேட்டா மேனேஜ்மென்ட் மூலம்
உடனடியாக அனுப்பப்படுகிறது.

இப்படி அப்ரூவல் செய்யப்படும் திட்டத்தின் நிலையை பற்றி ஜியோ ஸ்பேஷியல் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி சேட்டலைட் மூலம் எடுக்கப்படும் படங்கள் மூன்றாவது டிவியின் வழியே மோடியின் முன் வந்து
கொண்டிருக்கும்..ஆகையால் ஏமாற்றுவதற்கு வாய்ப்பே
இல்லை.

பாருங்களேன் ஒரு திட்டத்தின் தாமதத்தை அந்த அதிகா ரி ஒரு டிவியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கு வதும் இன்னொரு டிவியில் அது சம்பந்தபட்ட கோப்பு கள் அந்த இடத்தில் இருந்து பிரதமர் முன் வந்து கொண் டிருப்பதும் இன்னொரு டிவியில் அந்த அதிகாரி சொல் வது உண்மைதானா என்று சாட்டலைட் மூலம் எடுக்க ப்பட்டபடங்கள் வந்து கொண்டிருப்பதும்…ஸ் ஸ் ஸ்ப்பா

இதையெல்லாம் ஒரு பிரதமர் யோசிக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய அறிவு ஜீவியாக இருக்க வேண் டும் என்று நீங்களும் கொஞ்சம் யோசியுங்கள்…..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.