இந்தியாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமானநிலையம். இந்த விமான நிலையம் கடந்த 2013–ம் ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம்கோடியில் தரம் உயர்த்தப்பட்டதுடன், நவீன மயமாக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கண்ணாடிகள் விழுந்து உடைவதும், மேற்கூரை பெயர்ந்துவிழும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வந்தன.
 
இதையடுத்து இச்சம்பவம் பற்றி ஆய்வுநடத்துமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ உத்தரவிட்டார். அதன் படி மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சக இணைசெயலாளர் மற்றும் விமான நிலையங்களின் ஆணைய தலைவர் அடங்கிய அதிகாரிகள்குழு சமீபத்தில் சென்னை வந்தது. அந்த குழு விசாரணை நடத்தி சென்னை விமான நிலையத்தில் சிலமாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தங்களுடைய ஆய்வு அறிக்கையை மத்தியரசிடம் சமர்பித்தது.
 
இதுகுறித்து டெல்லியில் நேற்று அசோக்கஜபதி ராஜூ கூறுகையில், சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்புகுழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.