வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக அதிகஇடங்களை கைப்பற்ற அக்கட்சியின் தலைவர் அமித் ஷா திட்டம்  வகுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அசாமில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேற்குவங்காளம்  மற்றும் கேரளாவிலும் பாஜக வளர்ச்சி யடைந்துள்ளது. இந்தமாநிலங்களில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள் ேசர்க்கை திட்டத்தால் அங்கு கட்சி பல மடங்கு  வளர்ச்சி அடைந்துள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 2014ல் கேரளா மற்றும் லட்சத்தீவில் 4.6 லட்சமாக இருந்த பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்தஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7 லட்சமாக  உயர்ந்துள்ளது. இதே போல் ஆந்திரா-தெலங்கானாவிலும் இதே காலக்கட்டத்தில் 6.4 லட்சமாக இருந்த பாஜ உறுப்பினர்கள் எண்ணிக்கை 36.43 லட்சமாக  உயர்ந் துள்ளது. இது தொடர்பாக கட்சியின் துணைத்தலைவரும் உறுப்பினர்சேர்க்கை இயக்கத்தின் பொறுப்பாளருமான வினய் சகஸ்ரபுதே செய்தியாளரிடம்  கூறுகையில், ‘‘கோரமண்டல கடற்கரை மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதே அமித் ஷாவின் திட்டம்.

அந்த பகுதியில் உள்ள 205 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 100 தொகுதிக ளையாவது வரும் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்று  திட்டமிட்டுள்ளோம். இதற்காக பொதுத் தேர்தலில் வெற்றி பெற புதியபகுதிகளில் கட்சியை பலப்படுத்த வேண்டும். விதைத்ததையே அறுவடை  செய்ய முடியும் என்பதால் புதிய உறுப்பினர் ேசர்க்கையை தீவிரப்படுத்த அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.