முதலீடு இல்லாமல் பயனை அளிக்கக் கூடிய யோகாவிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 2-வது சர்வதேச யோகாதினம் கொண்டாட்டத்தில் பொது மக்களுடன் யோகா பயிற்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  கலந்து கொண்டனர். சர்வதேச யோகா தின கொண்டாட் டத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்துவருகிறது.

யோகா வாழ்க்கையில் ஒழுக்கத்தை கற்றுத் தருவதுடன், மனம் மற்றும் மூளையை ஒருங்கிணைத்து செயல்படும். யோகா செய்பவர்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ்வர். முதலீடு இல்லாமல் கிடைக்கும் இப்பயனை அனைவரும் தினமும் கடைபிடிக்கவேண்டும்.

யோகாவை பயில ஏழை பணக்காரர், படித்தவர் – படிக்காதவர் என்ற பேதமி ல்லை. யோகவை பள்ளிகளில் பாடமாக கொண்டு வரப்படும். சிறந்த யோகா ஆசிரியர்களை உருவாக்கி உலகம் முழுவதும் யோகாவை பிரபலப் படுத்த வேண்டும். யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை உணராமல் இருப்பது வருத்த மளிக்கிறது. 2017-ஆம் ஆண்டு முதல் இரண்டு யோகாவிருதுகள் வழங்கப்படும்  என்று பேசினார்.

யோகா நிகழ்ச்சியில் மூச்சு பயிற்சிகள், தியானம் இறுதியாக சாந்திபாதை செய்யப்பட்டது. 3 நிமிடம் 15 வினாடிகள் ஓடும் 'யோக் தீத்' என்ற யோகா சர்வதேச தின ஒரு தீம்பாடல் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அந்த பாடலை தீரஜ் சரஸ்வத் எழுதி உருவாக்கி உள்ளார்.

கேபிடல் வளாகம் தவிர, சண்டிகரில் முழுவதும் 100 இடங்களில் யோகநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் டி-சர்ட் மற்றும் கருப்பு அல்லது நீல டிராக் சூட்டின் அணிந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.