பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடுகளில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, 1951ல் கொண்டு வரப்பட்ட ஐ.நா., அகதிகள் தீர்மானம் மற்றும் அதைத்தொடர்ந்து, 1967ல் கொண்டுவரப்பட்ட அகதிகள் தொடர்பான நடைமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை.

ஐ.நா.,வில் உள்ள, 190 நாடுகளில், 140 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. 'ஏற்கனவே உள்நாட்டு மக்களுக்கு போதிய கட்டமைப்புவசதிகள் மற்றும் தேவையான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அண்டை நாடுகளில் இருந்து அதிகளவு மக்கள் அகதிகளாக வந்துவிடுவர்' என்பதாலேயே, இந்த அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வில்லை.

தற்போது, நாட்டில் அகதிகளுக்கான எந்தசட்டமும் இல்லை. அதேநேரத்தில், அகதிகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் உள்ளன. இருப்பினும், வங்கதேசம்,ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய, முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக உள்ள நாடுகளில் இருந்து, ஹிந்துக்கள் பலர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில்இருந்து வந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிகள், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருக்க, கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்தே, இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கான முயற்சிகள் துவங்கின.

இவ்வாறு அகதிகளாக உள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும் என, 2014 லோக்சபா தேர்தல்பிரசாரத்தின்போது, பா.ஜ., அறிவித்திருந்தது. அந்ததேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கும் வகையிலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இந்தியக் குடியுரிமைசட்டம் – 1955ல் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதாவை, அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொட ரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வரும் ஆகஸ்ட், 15ல், சுதந்திர தினக் கொண்டாட் டத்திற்குள், இவ்வாறு அகதிகளாக உள்ள ஹிந்துக்களுக்கு குடியுரிமைவழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.


அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட உள்ள வரைவு மசோதா, தற்போது தயாராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் ஒப்புதலுக்குப்பின், இது இறுதிசெய்யப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.இந்த வரைவுமசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்ற வாசகம் நீக்கப்படும்

இந்திய சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்துவந்து, இந்தியாவில், தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள், குடியுரிமை கோரலாம் அகதிகளாக வருபவர்கள், அவர்களுடைய நாட்டில் இருந்து வெளியேறியதற்கான சான்றி தழையும், குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது தாக்கல் செய்யவேண்டும். புதிய மசோதாவில், இந்தப்பிரிவு நீக்கப்படுகிறது

குடியுரிமை பெறுவதற்கான கட்டணமும் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்துவந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தக் கட்டணம், 100 ரூபாயாக இருக்கும்

குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தை, தற்போது மத்திய உள்துறை அமைச்ச கத்தில் தாக்கல்செய்ய வேண்டும். புதிய மசோதாவின்படி, தாங்கள் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,யிடம் தாக்கல் செய்தால் போதும் இந்தியக் குடியுரிமை பெறு வதன் மூலம், வங்கிக்கணக்கு துவங்கலாம்; டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, ஆதார் எண் ஆகியவற்றை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.