நாடுமுழுவதும், 1.6 கோடி போலி ரேஷன்கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால், 10 ஆயிரம்கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், மத்திய நிதித்துறை செயலர் அசோக் லவாஸா கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, அசோக் லவாஸா, நிருபர்களிடம் கூறியதாவது: நாடுமுழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய அரசின் மானியத்தொகையில், 10 ஆயிரம்கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும், சமையல் காஸ் மானியத்தை, நேரடியாக, வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதால், 14 ஆயிரத்து, 872 கோடி ரூபாயை, அரசு மிச்சப்படுத்திஉள்ளது.

நேரடி பணப்பட்டுவாடா திட்டம், :இந்தாண்டு இறுதிக்குள், மேலும், 150 திட்டங்களுக்கு நீட்டிக்க ப்படும். மகாத்மா காந்தி ஊரகவேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில், போலி வேலைஅட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், 2015 – 16ம் நிதியாண்டில், 10 சதவீததொகை மிச்சமாகி உள்ளது.

மத்திய அரசின் உதவித் தொகை வழங்கும் திட்டங்களில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த, மத்திய அரசுவிரும்புகிறது. எனவே, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழங்க ப்படும், உதவித் தொகை திட்டங்கள், தேசிய உதவித் தொகை இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப் படும்.

Leave a Reply