கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் உள்ளிட்ட பிறநிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரிசட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன் கிழமை அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2016-ம் ஆண்டு கடைகள், நிறுவனங்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணியிடச்சூழலை முறைப்படுத்துதல்) மாதிரி சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு மத்திய நிதிய மைச்சர் அருண்ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேலைவாய்ப்பை அதிகரிப்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்; 10 அல்லது அதற்கு அதிகமான தொழிலாளர் களுடன் செயல்படும் வணிகவளாகங்கள் போன்றவை வாரத்துக்கு 7 நாள்களும் செயல்படலாம். அவற்றுக்கு என குறிப்பிட்ட எந்த வேலைநேரமும் நிர்ணயிக்கப் படவில்லை. மாதிரிசட்டம், மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார். இந்தமாதிரி சட்டத்துக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு பெற வேண்டிய தில்லை. இந்த சட்டத்தில் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் மாற்றங்களை செய்து அமல்படுத்தி கொள்ளலாம்.

இந்த சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் ஊழியர்களுடன் கொண்டு இயங்கும் தொழிற் சாலைகள் அல்லாத கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிறநிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவைகளுக்கு ஆண்டு முழுவதும் 365 நாள்களும் விருப்பம்போல 24 மணி நேரமும் செயல்படுவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), உயிரிதொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரியும் உயர்திறன் கொண்ட தொழிலாளர்கள், நாளொன்றுக்கு 9 மணிநேரமும், வாரத்துக்கு 48 மணி நேரமும் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பதிலிருந்து சட்டத்தில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. போதியபாதுகாப்புடன் பெண்களை இரவுநேர பணியில் அமர்த்தவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் ஊழியர்களுக்கு குடிநீர்வசதி, உணவு விடுதி, முதலுதவி வசதி, சிறு நீர் கழிப்பதற்கான இட வசதி, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கான இடவசதி போன்றவற்றை உரிமையாளர்கள் செய்துகொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய கனிம ஆய்வு கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கபட்டது. இதன் வாயிலாக, தேசியபுவியியல் ஆய்வு மையத்தால் அடையாளம் காணப்பட்ட 100 சுரங்கங்களை மத்திய அரசு ஏலத்தில்விடுவதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.