பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச்செய்ய, பருவநிலை மாற்றம், ஏழ்மை ஒழிப்பு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு சவால் களைச் சமாளிப்பதற்கு உலகளவிலான உத்தியை பிரிக்ஸ் அமைப்பு வடிவமைத்து வருகிறது.  ஐ.நா. பாதுகாப்புகவுன்சில் மற்றும் அதன் பல்வேறு குழுக்களில் நாம் இணைந்து பணியா ற்றவும் போராடவும் வேண்டியுள்ளது.

பயங்கர வாதிகளில் நல்லவர்கள் என்று யாரும்கிடையாது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே எதிராகச் செயல்படுபவர்கள் தான் பயங்கரவாதிகள். அவர்களை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச் செய்யவேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட நாம் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப ஐ.நா. செயல் படுவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவசியம்.

பிரச்னைகளுக்கு கூட்டாகத் தீர்வுகளைக் காண்பதே பிரிக்ஸ்அமைப்பின் தலைவராக இந்தியாவின் முக்கிய பொறுப்பாக இருக்கும். இந்த அமைப்பானது உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிகட்டமைப்பில் தனி முத்திரையை பதித்துள்ளது.

இந்திய குடிமக்களில் 80 கோடிபேர் 35 வயதுக்கு கீழ் உள்ளனர். இளைஞர்களான அவர்கள் தான் இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக மாற்றுவதில் உந்து சக்தியாக உள்ளனர். இளைஞர்களின் சக்தியை பிரதமர் மோடி நன்கு உணர்ந்துள்ளார். பிரேசிலின் ஃபோர்டலேசா நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றிய போது, இளைஞர்களின் பங்களிப்பு குறித்து சுட்டிக் காட்டினார்.

இளைஞர்சக்தி என்ற ரீதியில் பார்க்கும்போது, ஐந்து பிரிக்ஸ் நாடுகளும் ஏராளமான மனிதவளத்தை கொண்டுள்ளன .

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்துநாடுகள் அங்கம்வகிக்கும் பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது நம் நாடு தலைமை தாங்குகிறது. அந்தமைப்பின் 8-ஆவது உச்சிமாநாட்டை கோவாவில் வரும் அக்டோபர் மாதம் நடத்தஉள்ளது.

இதனிடையே, குவாஹாட்டியில் பிரிக்ஸ் அமைப்பின் இளைஞர் உச்சி மாநாடு, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஜூலை 1 முதல் 3ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தில்லி வந்திருந்த பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த இளைஞர்களிடையே அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.